சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த, கல்குறிச்சி பஞ்சாயத்து, வெள்ளாளப்பட்டி கிழக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று இரவு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.