உளுந்துார்பேட்டை:திருவெண்ணைநல்லுார், கிருபாபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. திருவெண்ணைநல்லுார், மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில், கடந்த 14ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கியது. இதில், முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு, மாட வீதியாக வலம் வந்து, கோவிலை சென்றடைந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.