பவானி: பவானி காவிரி வீதியில் அமைந்துள்ள சின்ன கோவில் என அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. பங்குனி உத்திர தேரோட்ட விழாவானது கடந்த, 15ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. காலை, 9.00 மணிக்கு உற்சவ மூர்த்திகளான விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் மற்றும் ஸ்மாஸ்கந்தர் (முருகர்) போன்ற சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேர் திருவீதி உலா சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் மூலம் மேளதாளங்கள் முழங்க அக்ரஹார வீதி வழியாக வலம் வந்து நிலை அடைந்தது.
* அரச்சலூர் நாகமலைபகுதியில் தீர்த்தகுமார சுவாமிக்கு அபி?ஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அரச்சலூர், வடுகபட்டி, கண்டிக்காட்டு வலசு, அவல்பூந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 12 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை, அலங்கார வழிபாடுகள், உற்சவர் தேரோட்டம் நடந்தது. கொடுமுடியில் பிரசித்திபெற்ற மலையம்மன் கோவில் திருத்தேர் நடந்தது. முன்னாள் அமைச்சர் ராமசாமி தேர் வடத்தை இழுத்து தொடங்கி வைத்தார். பொதுமக்கள் கலந்துகொண்டனர்.