பதிவு செய்த நாள்
25
மார்
2016
11:03
திண்டிவனம்: திண்டிவனம் பாலமுருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. திண்டிவனம், செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன் ÷ காவிலில், பங்குனி உத்திர உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, காலை பாலமுருகனுக்கும், சக்திவேலுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை கோவிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு, தேர் மற்றும் கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி, இழுத்தபடி ஊர்வலமாக சென்றனர். இதேபோல், பெண்கள் பால் குடம் ஏந்தி சென்றனர்.