பதிவு செய்த நாள்
25
மார்
2016
12:03
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்களின் சக்தி கோஷம் முழங்க தீபரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விழாவின் ஒவ்வொரு நாளும் பூதகி, வெள்ளி சிங்கம், அன்னம், ரிஷபம், காமதேனு, கிளி, குதிரை வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்தார்.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 வரை அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. அக்னிச்சட்டிகளை கையில் ஏந்தியவாறு பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலைஅடைந்தனர். அங்கு மார்த்தாண்டி அம்மன் முன்பு அனைத்து அக்னிச்சட்டிகளும் வைக்கப்பட்டு பஜஜைகள் நடந்தது. இரவு 8 மணிக்கு தீப ரதத்தில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளினார். தீ வெட்டி, வாண வேடிக்கை, மேள, தாளம், பக்தர்களின் சக்தி கோஷம் முழங்க மாட வீதிகளில் அம்மன் வலம்வந்தார். நள்ளிரவு அம்மன் வைகை ஆற்றில் எழுந்தருளி கள்ளர் திருக்கோலத்துடன் காட்சியளித்தார்.நாளை காலை 4 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தவுள்ளனர். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்திருந்தனர்.