Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் 326 ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2016
12:03

கோத்தகிரி: கோத்தகிரி பர்ன்சைடு கல்யாண சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்த குடங்கள் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு, முருக பெருமானுக்கு, 108 மூலிகை பொருள்களால் சிறப்பு வேள்வி வழிபாடுகள், மலர் அர்ச்சனை, பேரொளி வழிபாடு நடத்தப்பட்டன.தொடர்ந்து, 11:00 மணிக்கு, 16 வகை நல்வாசனை திரவியங்களின் மூலம், அபிஷேக பூஜையும், பகல்,12:00 மணிக்கு, தீர்த்த அபிஷேகம், அலங்கார பூஜையும் நடந்தது. பின்பு, முருக பெருமான் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிப்பாடுகள் நடந்தன.பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு உற்சவர் திருக்கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 3:30 மணிக்கு சிறப்பு பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சி இடம் பெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். இதே போல, கோத்தகிரி சக்திமலை, தேன்மலை, சக்கத்தா, காத்துகுளி, நட்டக்கல், டி. மணியட்டி மற்றும் தொதநாடு கம்பட்டி உள்ளிட்ட முருகன் கோவில்களில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar