திருப்பதி வேதநாராயண சுவாமி கோவிலில் சூரிய ஜெயந்தி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2016 11:03
திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து, 60 கி.மீ., தொலைவில், நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும், மார்ச் 25ல், சூரிய ஜெயந்தி உற்சவம் நடக்கும். சூரியக்கதிர்கள், கோவில் மகா துவாரம் வழியாக கருவறைக்குள் நுழைந்து, அங்கு எழுந்தருளி இருக்கும் வேதநாராயண சுவாமி பாதத்தில் விழும்.நேற்று சூரிய உதயத்தின் போது கதிர்கள், கோவிலுக்குள் விழுந்தன. இதை காண, திரளான பக்தர்கள், கோவில் வாசலில் கூடினர். நேற்று மாலை கோவிலில் தெப்ப உற்சவமும் நடந்தது.