பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீரங்கநாதப்பெருமாள் கோவிலில், பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி விழாவையொட்டி சி றப்பு பூஜைகள் நடந்தன. அங்கு, 16 வகையான சிறப்பு அபிேஷகம், ஒன்பது வகை மலர்கள் சாற்றுதல், சிறப்பு அலங்காரம் இடம்பெறறன. விழாவில், பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராமகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.