விழுப்புரம் அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2016 12:03
விழுப்புரம்: விழுப்புரம் கோவிந்தசாமி நகர் அமிர்த கணபதி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழுப்புரம் கோவிந்தசாமி நகர் அமிர்த கணபதி கோவிலில் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவையொட்டி, மஹா அபிஷேகம், தீபாராதனை மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு திருமண வைபவம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.