மதுரை: திண்டிவனத்தில் இருந்து 29 வது கி.மீ., தொலைவில் புதுச்சேரி ரோட்டில் அமைந்து உள்ளது ’பஞ்சவடீ ஷேத்திரம்’. இங்கு 36 அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி எழுந்தருளியுள்ளார்.ஏப்.,12ல் ராமநவமி உற்சவ விழா துவங்குகிறது. ஏப்.,13 - 15 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. ஏப்.,15 ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு, அன்று காலை 9.00 மணிக்கு ரேவதி கிருஷ்ணா குழுவின் வீணை இன்னிசை, மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் செய்து வருகிறார்.