ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை கோவை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆறுமுகம் முன்னிலையில் நடந்தது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் எண்ணிக்கை நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் எண்ணப்பட்ட நிரந்தர பொது உண்டியலில் 23 லட்சத்து 68 ஆயிரத்து 743 ரூபாயும், தங்கம் 148 கிராமும், வெள்ளி 138 கிராமும் இருந்தது. தட்டு காணிக்கையில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 165 ரூபாயும், அன்னதான உண்டியலில் 63 ஆயிரத்து 119 ரூபாயும், தங்கரத உண்டியலில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 780 ரூபாயும்,தங்கம் 45 கிராமும், வெள்ளி 10 கிராமும் மொத்தம் 28 லட்சத்து 46 ஆயிரத்து 807 ரூபாய் இருந்தது.மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கோவில் கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் கோவில் ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.