பதிவு செய்த நாள்
27
ஆக
2011
10:08
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோயிலில் செப்., 1ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கொங்கணசித்தர் குறிப்பிட்டுள்ள "வாலை என்னும் தெய்வம் பாலாதேவியைக் குறிக்கும். பாலா என்றால் பத்து வயதுள்ள தேவி என்கிறார் கருவூரார். வாலையை பூஜிக்க முற்பிறவி நற்பலன் இருந்தால் தான் முடியும் என்பர். அவள் சிறுவயது பெண் என்றாலும் உலகுக்கே அன்னையாக விளங்குகிறாள். இங்கு அம்பாளின் பெயரால் வாலை குருசுவாமியும் கோயில் கொண்டுள்ளார்.
அவரது சீடர் காசியானந்தரும் இந்த தேவியை வழிபட்டுள்ளார்.இக்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் விநாயகர் பூஜையுடன் இன்று துவங்குகிறது. 28, 29 தேதிகளில் ஹோமங்கள், முதல் கால யாகசாலை பூஜையும், 30ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 31ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. செப்., 1 காலை, 3 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அன்று காலை 7.15 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கும், 7.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. 9.30 மணிக்கு மஹாஅபிஷேகம், தீபாராதனை செய்யப்படுகிறது. அன்றைய தினமே ஆவணி திருவிழா துவங்கி, செப்., 11 வரை நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா, சுவாமிக்கு புஷ்பாஞ்சலி, 1008 திருவிளக்கு பூஜை, அன்ன அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பக்த
குழுவினர் செய்து வருகின்றனர்.