சின்னசேலம் : சின்னசேலம் விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 5ம் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு அலங்காரங்களில் தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் ஆரியமாலா காத்தவராயன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சியின்போது, பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக் கடனை செலுத்தினர். பகல் 12.30 மணிக்கு விழா குழு தலைவர் குழந்தைவேல் முன்னிலையில் தேரோட்டம் துவங்கியது.