கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2016 02:03
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகச் செம்மல் திருக்கழுகுன்றம் தாமோதரன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதலில் சிறப்பு பெற்ற திருக்கழுகுன்றம் தாமோதரன் நேற்று வருகை தந்தார். அவரை திருநாவுக்கரசர் திருமடம் நாச்சியப்பன் வரவேற்றார். சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று திருமுறை பாடல்கள் பாடி அடியார் கூட்டத்திற்கும், பக்தர்களுக்குமிடையே ஆன்மிக சொற்பொறிவாற்றினார். செம்பொற்சோதிநாதர் கோவில் சிவனடியார்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.