Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழி! பெரியவர்களுக்கு மரியாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதுவல்லவா உதவி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2016
02:03

ஜெருசலேம் நகரில் மனைவி, மக்களுடன் வசித்த ஒருவர் அருகிலுள்ள ஜெரிக்கோ நகருக்கு பணி காரணமாக புறப்பட்டார். ஜெருசலேம் மலை உச்சியிலும், ஜெரிக்கோ பள்ளத்தாக்கிலும் இருந்தது. இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட துõரம் 20 மைல்தான் என்றாலும், மலைக்குன்றுகளைக் கடக்க  வேண்டுமென்பதால், கோவேறு கழுதையில் சென்றார். தேவையான துணிகள், உணவு எடுத்துச் சென்றார். செலவுக்கு பணமும் வைத்திருந்தார். அவர் ஓரிடத்தில் நின்று சாப்பிட ஆரம்பித்தார். களைப்பாக இருந்ததால் சற்று கண்ணயர்ந்தார். சற்றுநேரத்தில் திடீரென கூக்குரல் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தார் அவர். அவரைச் சுற்றிலும் பல திருடர்கள் நின்றனர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற அவரை, கொள்ளையர்கள் அடித்து பணத்தை பறித்துக் கொண்டதோடு, கழுதையையும் ஓட்டிக் கொண்டு போய் விட்டனர். அடிபட்ட அவருக்கு தாகம் வாட்டியது. அவரால் அருகிலுள்ள ஓடைக்குகூட செல்ல முடியவில்லை. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறிக்கொண்டிருந்தார். இரண்டு மணி நேரம் கடந்தபின்பு, அவ்வழியே ஒரு பாதிரியார் வந்தார்.

பாதிரியாரோ அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. யாரோ ஒருவனை கொள்ளைக்காரர்கள் அடித்துப் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு, தன்னையும் அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் வேகமாக சென்று விட்டார். சற்று நேரம் கழித்து மீண்டும் ஒருவர் வந்தார். அவர் அடிபட்டுக் கிடந்த பயணியை கவனித்தார். நண்பனே! உன்னைக் காப்பாற்ற வேண்டும் என எனக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால் உனக்கு உதவினால் என்னையும் கொள்ளைக்காரர்கள் அடிப்பார்கள். எனவே உனக்கு உதவ முடியாமைக்காக வருந்துகிறேன். மன்னித்துவிடு என சொல்லிவிட்டு வேகமாக போய்விட்டார்.  சிறிதுநேரம் கழித்து மற்றொருவர் ஒரு கழுதை மீது வந்தார். நிலைமையை புரிந்துகொண்ட அவர் அடிபட்டுக் கிடந்தவரை துõக்கி தண்ணீர் கொடுத்து, தன் துணிகளில் சிலவற்றைக் கொடுத்து உடுத்திக் கொள்ளச் செய்தார். தன் கழுதையின் மீது ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஒரு சத்திரத்திற்கு அவரைக் கூட்டிச் சென்றார். சத்திரக்காரனிடம் அவர் நன்கு குணமாகும் வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அதற்குரிய பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இந்தக்கதையில் சொல்லப்படும் பயணி யூத இனத்தைச் சேர்ந்தவர். முதலில் வந்த இருவரும் அதே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்! ஆனால், அவர்கள் தங்கள் சக யூதனுக்கு உதவ விரும்பாமல் போய்விட்டார்கள். கடைசியாக வந்தவரோ சமாரிய இனத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அவர் இனத்தை பாராமல் உதவி செய்தார். எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒருவர் கஷ்டப்படும் வேளையில் உதவி செய்ய வேண்டியது கடமை என்பதை இந்த பைபிள் கதை வலியுறுத்துகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar