நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருவதாக ஐதீகம். அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுவது அவசியமாகிறது. காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளரும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமான காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்தும் விடுபடலாம்.