பதிவு செய்த நாள்
29
ஆக
2011
10:08
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வரும் ஆக., 31ல் தேரோட்டம், சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இக்கோவிலில் சதுர்த்தி விழா கடந்த ஆக., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் விநாயகர் வலம் வருவார். இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
தேரோட்டம்: நேற்று மாலை 5 மணிக்கு, யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதம் செய்யும், கஜமுகாசூரசம்ஹாரம் நடந்தது. இன்று மாலை 3 மணிக்கு, தேரோட்டத்திற்கான முகூர்த்தக் கால் நடப்படும். வரும் 31 அன்று காலை 9.20 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் கற்பக விநாயகர் எழுந்தருள்வார். மாலை 4 மணிக்கு, தேரோட்டம் நடக்கும். அதை தொடர்ந்து, மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை, ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் மூலவர் சன்னிதியில் உள்ள கற்பக விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.