அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2016 12:03
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழா அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், கோவிலில் நேற்று நடந்தது. பவானி டி.எஸ்.பி., ஜானகிராம் தலைமை வகித்தார். அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீ மிதி விழாவில், ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்குவர். வழக்கமாக திருவிழா பகல், 11 மணிக்கு மேல்தான் நடக்கும். தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சற்று முன்னதாக நடத்தலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.