பதிவு செய்த நாள்
30
மார்
2016
12:03
உடுமலை: ராஜகாளியம்மன் கோவில் ஏழாமாண்டு விழாவில் இன்று, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.உடுமலை, தாராபுரம் ரோடு, சிவசக்தி காலனியில் அமைந்துள்ளது, ராஜகாளியம்மன் கோவில். கோவில் ஏழாமாண்டு விழா, மார்ச் 15ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது; நாளை மறுநாள் நிறைவடைகிறது.திருவிழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன.மார்ச் 20ல், கொடுமுடிக்கு சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. மார்ச் 22ல் திருவிழா கம்பம் நடப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை, திருமூர்த்திமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள், உடுமலை மாரியம்மன் கோவிலில் இருந்து, ராஜகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு, சக்தி விநாயகர் கோவில் கிணற்றிலிருந்து கும்பம் தாளித்தல் நடந்தது.நேற்று மாலை, மாவிளக்கு, பூவோடு எடுக்கப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், ஊஞ்சல் தாலாட்டும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் ராஜகாளியம்மன் வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார்.நாளை மாலை, 4:00 முதல் 5:00 மணிக்குள், அம்மனுக்கு பொங்கல் வைத்து, மகா அபிேஷகம் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.