திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: விழிப்புணர்வு பேனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2026 05:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், என திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் முன் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் அருணாசலேஸ்வரர் கோவில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருப்பு அறையில் ஏராளமான பக்தர்கள் இன்று குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்து தரிரசனம் செய்தனர். கோவிலில் போலிச் சாவியை கட்டுப்படுத்த, சுவாமி தரிசன செய்ய செல்லும் சன்னதி உள்ள கதவு உட்பட பல முக்கிய இடங்களில் பயோமெட்ரிக் பூட்டு சோதனைக்காக பொருத்தப்பட்டுள்ளது.