திருப்புத்தூர்: திருப்புத்தூர் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயில் மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இக்கோயிலில் திருப்பணி நடந்து கடந்த பிப்.,10ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 48 நாட்களுக்கு தினசரி காலை மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன. நேற்று காலை நித்ய திருவாராதனத்துடன் பூஜைகள் துவங்கியது. காலை 8 மணி முதல் ஹோமங்கள் துவங்கின. பின்னர் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பிரதான கும்பத்திற்கு அபிஷேகமும், விசேஷ திருவாராதனமும் நடைபெற்றது.