பதிவு செய்த நாள்
31
மார்
2016
01:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.68.30 லட்சம் உண்டியல் வசூலானதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். ராமேஸ்வரம் திருக்கோயிலில் பிப்., 26 தேதிக்கு பிறகு நேற்று, சுவாமி, அம்மன், ஆஞ்சநேயர் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதியில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூ.68 லட்சத்து 30 ஆயிரத்து 124, தங்கம் 95 கிராம், வெள்ளி 4 கிலோ 110 கிராம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண் காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், செல்லம், கண்ணன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி, பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.