ஆண்டிபட்டி: வைகை அணை அருகே ஆற்றில் பாலம் கட்ட பள்ளம் தோண்டியபோது கிடைத்த மூன்று சுவாமி கற்சிலைகள், ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆண்டிபட்டிபெரியகுளம் ரோட்டில் வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஆற்றில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது மண்ணில் புதைந்திருந்த மூன்று பழங்கால கற்சிலைகள் மீட்கப்பட்டன. தனித்தனியாக இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை, பெருமாள் சிலைகளுடன் ஒரு அரிவாளும் கிடைத்தது. இதனை பணியாளர்கள் வைகை அணை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.