சிவமூர்த்தங்கள் மூன்று பிரிவாகப்பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
போக மூர்த்தம் போக வடிவம்: அம்பாளுடன் கூடிய இன்பநிலையில் எழுந்தருளியிருக்கும் சந்திரசேகரர், உமாமகேஸ்வரர், இடபாருடர், சோமாஸ்கந்தர் ஆகிய மூர்த்தங்கள் போக வடிவங்கள் ஆகும்.
கோர மூர்த்தம் கோரவடிவம்: அம்பாள் இல்லாமல், வீர நிலையில் அருள்புரியும் காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் ஆகிய மூர்த்தங்கள் கோரவடிவம் ஆகும்.
யோக மூர்த்தம் யோக வடிவம்: யோக நிலையில் அமர்ந்திருக்கும் சுகாசீனர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்கள் யோகவடிவம் ஆகும்.