சதுரகிரியில் தடையை மீறி செல்லும் பக்தர்கள்: திகைக்கும் வனத்துறையினர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2016 11:04
வத்திராயிருப்பு: சதுரகிரியில் தடையை மீறி செல்லும் பக்தர்களை தடுக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். சதுரகிரி மலைக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருந்ததாலும், வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக இருந்ததாலும் மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்ற நம்பி க்கையிலும், பக்தர்கள் மற்ற நாட்களில் செல்ல தடை விதிக்கப்பட்ட விபரம் தெரியாமலும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நாட்களில் மலைக்கு செல்ல அடிவாரத்தில் குவிந்தனர். வழக்கம்போல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பக்தர்கள் வனத்துறையினரில் அனுமதியை எதிர்பார்க்காமல் உள்ளே புகுந்து மலைக்கு செல்ல துவங்கினர். வனத்துறையினர் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால் அவர்களால் பக்தர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர்களை மலைக்கு செல்ல உயர் அதிகாரிகள் அனுமதித்தனர்.