பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
12:04
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தற்காலிக உண்டியல், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா, கடந்த, 23ம் தேதி நடந்தது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோவில் பிரகாரத்தில், இரு தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலையில், நேற்று காலை, இரு உண்டியல்களும் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டன. இதில், ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 261 ரூபாய் இருந்தது. உண்டியல் பணம் எண்ணும் பணியில், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.