சென்னிமலை கோயிலின் கருவறையின் பின்புறம் உள்ள சுவரில், சிம்ம வாகனத்துடன் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். தலையில் கொண்டையுடனும், கையில் வில்லுடனும் இந்த முருகப்பெருமான் காட்சி தருகிறார். இதேபோல் திருப்போரூர் கோயிலிலும் முருகன் சிம்ம வாகனத்துடன் காணப்படுகிறார்.