திருவாலங்காட்டிற்கு செல்லும் வழியில் உள்ளது பழையனூர். காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டிற்கு சென்றபோது பழையனூரில் உள்ள சிவபெருமான் தலத்திற்கு வந்தார். அவருக்கு அங்கிருந்து திருவாலங்காடு செல்லும் வழி தெரியவில்லை. இதனால் இறைவனிடம் மனமுருக வேண்டி, திருத்தலத்தை அடைய வழி கூறும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து பழையனூர் சிவன், காரைக்கால் அம்மையாருக்கு வழிகாட்டினார். பழையனூரில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாலங்காடு கோயிலிற்கு செல்லும் வழி நெடுகிலும், சிவலிங்கமாக தோன்றி காரைக்கால் அம்மையாருக்கு வழிகாட்டினார் ஈசன்.