பதிவு செய்த நாள்
02
ஏப்
2016
12:04
புதுச்சேரி: பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், வெற்றி பெற வேண்டி, முதலியார்பேட்டை
வன்னிய பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்கிரீவருக்கு ஏப்.,1ல் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7.00 மணிக்கு, லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு, பால், தயிர், தேன், சந்தனம்
உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களும் வெற்றி பெற்று, சிறப்பான மதிப்பெண்கள் பெற வேண்டி சிறப்பு ஹோமங்கள் மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.