பதிவு செய்த நாள்
02
ஏப்
2016
12:04
அவிநாசி: வேலாயுதம்பாளையம் ஊராட்சி, சின்ன கருணைபாளையத்தில் இருந்து ஆண்டுதோறும் குதிரை வடிவம் செய்து, ஆகாசராயர் கோவிலில் வைத்து பூஜை செய்வது வழக்கம். நடப்பாண்டில், ஏப்.,1 குதிரைக்கு சிறப்பு பூஜை செய்து, ஊர்வலம் துவக்கப்பட்டது.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், 6 கி.மீ., தூரம் குதிரை சுமந்த பக்தர்கள், ஆகாசராயர் கோவிலுக்கு சென்றனர். வழி நெடுகிலும், சாலையில், தண்ணீர் ஊற்றப்பட்டது; பல இடங்களில், குதிரை சுமந்தவர்களுக்கு, நீர் மோர், சர்பத் வழங்கப்பட்டது. முன்னதாக, மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஆகாசராயர் கோவிலுக்கு சென்ற குதிரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், கருப்பராயர் சன்னதியில் கிடா பலியிடப்பட்டு, பொங்கல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.