வில்லியனுார் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2016 12:04
வில்லியனுார்: வில்லியனுார் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா ஏப்.,1ல் நடந்தது. வில்லியனுார் மார்க் கெட் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, கடந்த கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,1 இரவு 7:30 மணியளவில் தீ மிதி திருவிழா நடந்தது. வில்லியனுார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தீமித்து, நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். சுவாமி வீதியுலா நடந்தது.