பதிவு செய்த நாள்
02
ஏப்
2016
12:04
ஊத்துக்கோட்டை: வரதராஜ பெருமாள் கோவிலில், 14ம் தேதி ஐந்தாம் ஆண்டு லட்சார்ச்சனை
விழா நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டை, பிராமணத் தெருவில் சுந்தரவல்லி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரவரதராஜ
பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், புரட்டாசி மாத உற்சவம்,
சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய
விழாக்களில் தமிழ் வருடப்பிறப்பு அன்று லட்சார்ச்சனை விழாவும் ஒன்று. வரும், 14ம் தேதி
இங்கு ஐந்தாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெறும். மறுநாள், 14ம் தேதி காலை, 7:30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது. மாலை, 5:30 மணிக்கு ஊஞ்சல்
சேவையும், மாலை, 6:00 மணிக்கு, சுந்தர வரதராஜர் சேவா குழுவினரின் பஜனை நடைபெறும்.