பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
நெட்டப்பாக்கம்: மடுகரையில் ஏழு கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் அமைந்துள்ள சுந்தர விநாயகர், அரசடி வினாயகர், சத்திய நாராயணப் பெருமாள், புதிதாக கட்டுப்பட்டுள்ள ராஜகோபுரம், திரவுபதியம்மன், பிடாரி அம்மன், மாரியம்மன், நாகாத்தம்மன் உள்ளிட்ட கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி நேற்று முன்தினம் முதல்கால பூஜை, நவக்கிர பூஜை, கோபூஜை, தன பூஜை, பூர்வாங்க பூஜை நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு சுந்தர விநாயகர், சத்திய நாராயணப் பெருமாள் உள்ளிட்ட கோவில்களின் கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.மடுகரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு 9.30 மணிக்கு சத்தியநாராயண பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தனபூபதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.