பதிவு செய்த நாள்
05
ஏப்
2016
11:04
திருப்பதி: திருமலையில், இன்று காலை, 6:00 மணி முதல், 12:00 மணி வரை, ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யபட்டு உள்ளது. யுகாதி பண்டிகை, ஏப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருமலை, ஏழுமலையான் கோவிலில், இன்று காலை சுத்தம் செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதற்காக, இன்று காலை, 6:00 மணி முதல், 12:00 மணி வரை, ஆறு மணி நேரத்திற்கு, ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.பிற்பகல் 12:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்கள் அனுமதிக்கபடுவர் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.