ப.வேலூர்: ப.வேலூரில், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. ப.வேலூர், மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த, 20ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது. நேற்று தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், நாளை அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.