Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைப்பட்டி காளியம்மன், பைரவர் ... குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2016
12:04

ஆரணி: ஆரணி கோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. ஆரணி டவுன் கொசப்பாளையம் சுப்பிரமணிய சாஸ்திரியார் தெருவில், கோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில், 9ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. பின்னர் முக்கிய வீதி வழியாக அன்ன வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவ விழாவையொட்டி, தினசரி காலை, 7 மணி மற்றும் இரவு, 7 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான, 14ம் தேதி சூரிய குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கேசவ நாராயணன், செயல் அலுவலர் சசிகலா செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar