மதுரை: காளவாசல் குழந்தையானந்தா சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி மண்டலாபிஷேகம் வியாழன் (7-4-16) சிறப்பாக நடந்தது. அன்று காலை 8 மணிக்கு கணபதிஹோமம் மற்றும் அதை தொடர்ந்து ஸ்ரீவித்யா ஹோமமும் நடந்தன. பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தையானந்தா சுவாமியை வழிபட்டனர். அதன் பிறகு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.