ஸ்ரீவி., மாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா: பக்தர்கள் நேர்த்திகடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2016 11:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இக் கோயில் பூக்குழி விழா கடந்த மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் 12ம் நாளான நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10 மணி முதலே பக்தர்கள் மஞ்சள் நீராடி, ஈர உடையுடன் கோயிலில் காப்பு கட்டி, ரதவீதிகளில் வலம் வந்து வரிசையில் காத்திருந்தனர்.
நேர்த்திகடன்: 12.30 மணிக்கு கோயில் அர்ச்சகர் ஹரிரஹரன், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், மதியம் 1.05 மணிக்கு பூக்குழி இறங்க துவங்கினர். மாலை 5 மணிவரை நடந்த இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். மதுரை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.
தேரோட்டம்: ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் அறிவழகன் தலைமையில் அறநிலையத்துறையினர் செய்தனர். டி.எஸ்.பி.வேணுகோபால் தலைமையில் நூறுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைதொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.