காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பூச்சொரிதல் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபி÷ஷக, ஆராதனை நடக்கிறது. வருகிற 10-ம் தேதி காலை 6 மணிக்கு கீழ ஊரணி கணேசர் கோயிலிலிருந்து பால்குடம், வேல்காவடி எடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு முத்தாளம்மன் கோயிலிலிருந்து கரகம் மற்றும் மது முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. 11-ம் தேதி மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்.