பதிவு செய்த நாள்
08
ஏப்
2016
12:04
உடுமலை: உடுமலை, சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி, பகவதி அம்மன் மற்றும் ரேணுகாதேவி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், பிரத்தியங்கிரா மகா யாகம் நடத்தப்படுகிறது. அமாவாசையான நேற்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், வியாபாரம் பெருகவும், அனைத்து வித பாவதோஷங்கள் நீங்கவும், பிரத்தியங்கிரா தேவிக்கு வர மிளகாய்களில் மகா யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.