கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரை, கல்லுக்குறிக்கையில் அமைந்துள்ளது கால பைரவர் திருக்கோயில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் சனீஸ்வரரின் குரு நாதராக காலபைரவர் விளங்குகிறார். இவரை வழிபட, எதிரி பயம், வறுமை, துன்பம், நோய்கள் நீங்கும். இவரை ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்திலும், தேய்பிறை அஷ்டமியிலும் ஏராளமானோர் வந்து வழிபட்டு பயன் அடைகின்றனர்.