ஓசூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது காமாட்சி திருக்கோயில், பொதுவாக, கோயில்களில் அர்ச்சர்களே திருக்கோயில் மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் குழந்தைகளே அன்னை காமாட்சிக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு பூஜை செய்யும் பழக்கத்தைக் கொண்டு வரவே இந்த வழக்கம் இங்கே கடைபிடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், கருவறை அம்பாளுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொள்ள, விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.