கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் முழையூரில் உள்ளது பரசுநாதர் திருக்கோயில். தேவதைகள் திருதியை திதியில் பரசுநாதரை வழிபட்டு, எதையும் விருத்தி செய்யும் சக்தியைப் பெற்ற தலம் இது. உணவு தொடர்பாக உடலில் ஏற்படும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் வேண்டி இங்கு பூஜை செய்கின்றனர். தவிர, முடங்கிக் கிடக்கும் பணம், தரிசாக கிடக்கும் நிலம், தோட்டம், வீடு ஆகியவை விருத்தி பெற அட்சய திரிதியை அன்று, மாதுளை முத்துக்களால் பரசுநாதரை காப்பிட்டு, வணங்குகின்றனர். பிறரை நம்பி ஜாமீன் கொடுத்து ஏமாந்து சிக்கியவர்களுக்காகவும் இக்கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. திரிதியையன்று ஜாதி மல்லிகைப் பூக்களை தொடுத்து, இறைவனுக்கு சாத்தி வழிபட்டு, அதை சுமங்கலிகளுக்கு தானம் செய்திட, அனைத்துத் துன்பங்களும் விலகும்.