வால்பாறை: வால்பாறையில் ஷீரடிசாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திரில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வால்பாறை நகை கடை வீதியில் ஷீரடிசாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திர், கடந்த, 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், 11 ம் தேதி திறக்கப்பட்டது. இக்கோவிலில் நாள் தோறும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு நடைபெற்ற பூஜையில் பஜன் பாடல்களும், சிறப்பு அலங்கார பூஜையும் இடம்பெற்றன. ஒருங்கிணைப்பாளர் சாய்செல்வரத்தினம் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.