கோவை: தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று கோவையிலுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், கோனியம்மன், உக்கடம் லட்சுமிநரசிம்மர், கரி வரதராஜபெருமாள், பெரியகடைவீதியிலுள்ள லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதியிலுள்ள வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வைசியாள் வீதியிலுள்ள வாசவிகன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ராமர் பட்டாபிஷேக கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், நேற்று காலை, வேப்பம் பூ மற்றும் பழம் சேர்ந்த கலவையை இறைவனுக்கு படைத்து, பிரசாதமாக ஏற்றுக்கொண்டனர்.