திருப்போரூர் : கந்தசாமி பெருமான் கோவிலில், பங்குனி கிருத்திகை விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
திருப்போரூர் கந்தசாமி பெருமாள் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதுபோல், நேற்றும், பங்குனி மாத கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்தசாமி பெருமானை தரிசிக்க, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் பலர் காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும், மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து மாலையில், கந்தசாமி பெருமான் வள்ளி தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில், நான்கு மாட வீதிகளிலும் திருவீதிவுலா சென்று அருள்பாலித்தார்.