பதிவு செய்த நாள்
11
ஏப்
2016
01:04
உடுமலை: பிரசித்தி பெற்ற உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நாளை நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது; ஏப்., 28 ல் தேரோட்டம் நடக்கிறது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நாளை மாலை, 6:00 மணிக்கு, நடக்கிறது. நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில், தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் வாசிக்கப்பட்டு, விழாவுக்கான நோன்பு சாட்டப்படுகிறது. நோன்பு சாட்டுதலை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷக பூஜைகள் நடக்கின்றன. ஏப்., 19ல் திருவிழா கம்பம் போடுதலும், ஏப்., 22ம் தேதி, திருவிழா கொடியேற்றப்படுகிறது. அன்று முதல் பூவோடு எடுக்கப்படுகிறது. ஏப்., 28ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.