திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதி யம்மன் கோவில் தீமிதி விழாவையொட்டி சுவாமி திருகல்யாணம் வரும் 22ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு திரவுபதி யம்மன் கோவில் தீமிதி விழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங் கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி யுலா நடந்து வருகிறது.வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 23ம் தேதி காலை 11:00 மணி தேர் திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தீமிதி விழா, வரும் 24ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.