பதிவு செய்த நாள்
11
ஏப்
2016
01:04
கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், ஏப்., 21ம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடக்கிறது.
சித்திரை விழாவை முன்னிட்டு, வரும், ஏப்., 12ம் தேதி இரவு உற்சவம், அங்குரார்ப்பணம், 13ம் தேதி காலை, 9.30 மணி முதல், 10.30 மணிக்குள் துவஜாரோஹனம், இரவு, 7.30 மணிக்கு ஹம்ஸ வாகன உற்சவம், 14ம் தேதி காலை இரண்டாம் திருநாள் பல்லாக்கு, இரவு சிம்ம வாகன உற்சவம் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, 8 மணிக்கு மூன்றாம் திருநாள் பல்லாக்கு, இரவு, 7.30 மணிக்கு ஹனுமந்த வாகன உற்சவம், 16ம் தேதி காலை, 8 மணிக்கு பல்லாக்கு, இரவு வெள்ளி கருட வாகன உற்சவம், 17ம் தேதி இரவு சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. வரும், 18ம் தேதி காலை, 8 மணிக்கு ஆறாம் திருநாள் பல்லாக்கு ரங்கநாத சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமி எழுந்தருளுகிறார். இரவு யானை வாகன உற்சவம், 19ம் தேதி காலை, 8 மணிக்கு ஏழாம் திருநாள் பல்லாக்கு, மாலை, 4.30 மணிக்கு மேல், 5.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்ப விமான உற்சவம் நடக்கிறது. மேலும், 20ம் தேதி காலை, 8 மணிக்கு எட்டாம் திருநாள் பல்லாக்கில் ரங்கநாதர் சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமி ஆண்டாங்கோவிலில் எழுந்தருளுகிறார். அன்று இரவு குதிரை வாகன உற்சவம், 21ம் தேதி அதிகாலை, 5.30 மணிக்கு மேல், 6 மணிக்குள் ரதாரோஹனம், காலை, 8.30 மணிக்கு மேல், 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல், 22ம் தேதி காலை அமராவதி நதியில் தீர்த்தவாரி, இரவு கெஜலட்சுமி வாகன உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 23ம் தேதி இரவு ஆளும் பல்லாக்கு, 24ம் தேதி காலை, 8 மணிக்கு ரங்கநாதர் சுவாமியுடன் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம், 25ம் தேதி காலை சுவாமிக்கு புஷ்பயாகம் நடக்கிறது.