பதிவு செய்த நாள்
11
ஏப்
2016
01:04
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 19ல் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிவ, சிவ கோஷத்துடன் புதிதாக நிறுவப்பட்டுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரம், பலிபீடத்திற்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் சிம்மாசனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர். மேலும் கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, ரிஷபம், நந்தி, அன்னம், யானை உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இரவு வீதியுலா நடக்கிறது.
ஏப். 19 ல் மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் மாலை 5 மணிக்கு நடக்கிறது. மறுநாள் காலை 9.30 மணிக்கு தேரோட்டமும், ஏப். 21 ம் தேதி இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்கள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.